வள்ளுவர் விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு.

நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

நோர்வூட் பிரதேசசபைக்குற்பட்ட சமர்ஹில் வட்டாரம் ஒஸ்போன் பங்ளா பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட வள்ளுவர் விளையாட்டு மைதானம் 24/01/2020 திறந்து வைக்கப்பட்டது

நோர்வூட் பிரதேசபை உறுப்பினர் ராமச்சந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் 05 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்ட்ட வள்ளுவர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் முன்னாள் மத்தியமாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கம்/முன்னணியின் இளைஞரணி தலைவரும் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமான பா.சிவனேசன் தெ.தே.ச நோட்டன் பிரதேச அமைப்பாளர் நந்தகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -