இலங்கை பௌத்த நாடு இல்லை என்று கூறுவோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்-பொன்சேகா

லங்கை பௌத்த நாடு இல்லை என்று கூறிக்கொண்டு சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் பெயரை களங்கப்படுத்தினர் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை இன்றைய தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“ஐக்கிய தேசிய கட்சி மத்தியவங்கி முறி விற்பனை ஊடாக பொதுமக்களின் பணத்தை திருடியுள்ளனர். இலங்கை சிங்கள பௌத்த நாடு இல்லை என்று கூறிக்கொண்டு சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் பெயரை களங்கப்படுத்தினர்.

இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் கட்சியில் நீடிக்க கூடாது. இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும்” என்றார்.

அண்மையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு இல்லை என்று பகிரங்கமாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -