யார் உண்மையாக மக்கள் பிரச்சினைகளை தீர்கிறார்களோ, அவர்களுக்கே தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும்;.

அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் கே.ஆர் கிசான் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
நாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் மாமனோ,மச்சானோ, எமது உறவினர்கள் அல்ல. ஆகவே நாம் பார்க்க வேண்டும் எமது பிரச்சினைகளை யார் தீர்க்கிறார்களோ,யார் உரிமைகளையும் சலுகைகளை பெற்றுக்கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். என அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர். கிசான் தெரிவிப்பு.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரித்து அருணலு மக்கள் முன்னணி ஒழுங்கு செய்திருந்த அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று (02) ஹட்டன் டிக்கோயா நகர மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...
இந்த நாட்டில் ஜனாதிபதியாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வர முடியாது. ஆகவே நாம் பெரும்பான்மை இனத்தினை சேர்;ந்த ஒருவரை தான் ஆதரித்து ஆக வேண்டும்.எமது அதிகமான சலுகைகளை எவர் பெற்றுக்கொடுக்க முன் வருகிறார்களோ, அவர்களுக்கே. எமது வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இன்று நிபந்தனை இன்றி தான் தமிழ் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு வழங்கியிருக்கிறார்கள்.ஆனால் 2015 ஆண்டில் நிபந்தனைகளை விதித்து ஆதவு வழங்கி மலையக மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்,வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்,காணிப்பிரச்சினை தீர்க்கப்படும்,என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அது எதனையும் செய்யவில்லை.அவ்வாறு சொல்லியம் எதையும் செய்யாதவர்கள் நிபந்தனை அற்ற ஆதரவின் மூலம் எதனை பெற்றுக்கொடுக்க போகிறார்கள்.
ஆகவே தான் நிபந்தனை ஏற்கிற ஒரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்.நிபந்தனை என்பது கட்டாயம் ஆகவே நான் எடுத்த முடிவு சரியிருக்கும் என்று எண்ண வேண்டாம் நீங்களாக சிந்தித்து பாருத்து செயப்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இன்று மலையகத்தில் இருபத்தி நான்காயிரம் பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கிறார்கள்.எமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களை எடுது;துக்கொள்ளுங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு,சுகாதார அமைச்சு,கல்வி அமைச்சு,பொருளாதார அமைச்சு,விவசாய அமைச்சு,இளைஞர் வலுவூட்டல் அமைச்சு,எல்லாம் அமைச்சும் எமக்கு கிடைத்தது.இதில் 400 சமூர்த்தி வங்கிகள் திறந்திருந்தால் கிட்டதட்ட 2000 பேருக்க வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து கதிர்வீச்சு பரிவு,,ஈ.சி. ஜீ.எக்ஸ்ரே,ஸ்கேன் என்று போடப்பட்டிருந்தால் ஒரு பிரிவுக்கு ஐந்து பேர் வீதம் ஒரு வைத்தியசாலையில் 20 பேர் தொழில் வாய்ப்பினை பெற்றிருப்பார்கள்,நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 163 வைத்தியசாலைகள் உள்ளன.3000 பேர் வேலை வாய்ப்பினை பெற்றிருப்பார்கள்.கல்வி ராஜங்க அமைச்சின் மூலம் விளையாட்டுத்துறைக்கு நியமனம் கிடைத்தது. அதனை சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை விஜயகலா சரியாக பயன்படுத்திக்கொண்டார் அதில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு,மனித வள நிறுவனத்திலிருந்து அனைத்து நலன்புரி விடயங்களும் இதன் கீழ் தான் வருகின்றன.நாம் என்ன செய்தோம் ஐந்து வருடம் ஐந்து வருடம் போய்விட்டது.இதனை அபிவிருத்தி செய்திருந்தால் 5000 பேருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்திருக்கலாம்,சமுர்த்தி பிரிவினை அபிவிருத்தி செய்திருந்தால் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.ஒவ்வொரு அமைச்சிலும் தற்போதும் 700 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.நகரசபையில் உள்ளன. கிளங்கன் வைத்தியசாலையில் உள்ளன.ஏன் பேசி வாங்க முடியாது.இன்னும் உயர்தரம் சாதாரண தரம் படித்து வெளியேறும் உங்கள் பிள்ளைகளுக்கு வேலை இல்லாது போகும்.இன்று மலையகத்தில் பல்வேறு துறையில் சிறப்பு பட்டங்கள் பெற்ற 300 பேர் ஏதாவது அரச துறையில் உதவியாளராகவாவுது சரி வேலை வாய்ப்பு பெற்றுத்தாருங்கள் என்று கேட்கிறார்கள்,எவ்வளவு கவலையான விடயம்.இன்று இவ்வாறான விண்ணப்பங்கள் அரச சேவை ஆணைக்குழுவில் குவிந்து கிடக்கின்றன.பட்டதாரியாகியும் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஏனையவர்களுக்கு எவ்வாறு வேலை கிடைக்கும்.இங்குள்ள அரசியவாதிகள் நினைத்திருந்தால் 150 இற்கும் மேல் அமைச்சுக்கள் உள்ளன. இந்த 300 பேரையும் ஒவ்வொரு அமைச்சிலும் ஐந்து பத்து பேர் என நிரப்பி அவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்திருக்கலாம்.அவர்களுக்கு தேவை தேர்தல் வந்தால் வாக்களியுங்கள் நாங்கள் உங்களை கவனிப்போம.; அவர்கள் எவரிடமும் தரவுகள் கிடையாது ஆகவே நாங்கள் சொல்கிறோம்.சரியான தரவுகளுடன் சரியான இடத்தில் கொடுப்பதன் மூலம் நாம் எமது தேவைகளை சாதித்து கொள்ள முடியும் அதனை தான் நாங்கள் செய்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -