ஒலுவில் பிரதேசத்தில் வீதி நிர்மாண பணிகள் ஆரம்பம் செய்யும் நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து உள்ளிட்ட வாழ்வாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத வீதியாகவுள்ள வெளிச்ச வீட்டு கடற்கரை ஊடாக கரையோர வீதிக்கு கிரவல் இட்டு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி குழு தவிசாளருமாகிய அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக இணைப்பாளர் எஸ்.சத்தார் ஆசிரியர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ. நியாஸ், ஒலுவில் 6ஆம் பிரிவிற்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். முசாதீக், கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம். வலீத் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :