நாடு முழுவதும் கண் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்நோய் பரவுவதைத் தடுப்பதற்கு, சுகாதாரப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு, தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மொனிகா விஜேரத்ன வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
கண்ணீர் வருதல், கண்கள் சிவத்தல், கண்களில் வலி ஏற்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கை வைத்தியம் செய்வதைத் தவிர்க்குமாறும், கைக்குட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் நோயாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.