முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அமைச்சர் ராஜித அம்பாறையில்.
காரைதீவு நிருபர் சகா-முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்குமான பேரவையின் தலைவியுமான சந்திரிகாபண்டாரநாயக்க குமாரணதுங்க இன்று(13) புதன்கிழமை இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்திற்காக அம்பாறைக்கு வரவிருக்கிறார்.
புதிய ஜனநாயகமுன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்றுநடைபறெவிருக்கும் 4 கூட்டங்களில் பிரதான பேச்சாளராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இன்று காலை 10மணிக்கு அம்பாறையிலும் 11.30மணியளவில் ஆலையடிவேம்பிலும் பிற்பகல் 2.30மணியளவில் கல்முனையிலும் பிற்பகல் 3.30மணியளவில்சம்மாந்துறையிலும் நடைபெறவிருக்கும் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என ஏற்பாட்டாளர்கள் சார்பில் சம்மாந்துறை பிரதேசசபை உபதவிசாளர் வெ.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்திலும் கல்முனை நற்பிட்டிமுனை சுமங்கலிமண்டபத்திலும் சம்மாந்துறை நகரமண்டபத்திலும் இக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன என்றுஜெயச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் முன்னாள் வேட்பாளர்கள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆதவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அமைச்சர் ராஜித விஜயம்!
இதேவேளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னஅவரது மகள் சத்துர எம்.பி. ஆகியோரும் இன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவிருப்பதாக முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம்சங்கர்தெரிவித்தார். இன்று பிற்பகல் 3மணியளவில் வீரமுனை மைதானத்தில் வேட்பாளர் சஜித்தை ஆதரித்து நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.