நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிழையான வழிநடத்தல் காரணமாகவும்,
அர்த்தமில்லாத பீதி காரணமாகவும் புதிய ஜனாதிபதிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கவில்லை.
இருப்பினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீது நம்பிக்கை வைத்து வடக்கு கிழக்கிலும், நாடு தழுவிய ரீதியில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் சுமார் அரை மில்லியனுக்கு உட்பட்ட வாக்குகளை அளித்துள்ளனர்.
பெரும்பான்மை சமூகத்தின் கணிசமான வாக்குகளை அவர் பெற்றிருந்தாலும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் ஒரு தேசத்தின் தலைவராக புதிய ஜனாதிபதி தனது கடமைகளை முன்னெடுப்பார் என்று நம்புகின்றோம்.
எனவே, இனியும் இனம் சார்ந்த குறுகிய அரசியல் வட்டத்தினுள் நின்று நாம் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ள முனைவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல. நாகரீகமான அரசியல் கலாசாரத்தின் ஊடாக நாட்டின் அபிவிருத்தி, இன நல்லிணக்கம், உட்கட்டமைப்பு போன்ற முக்கிய விடயங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூடிய கரிசனை செலுத்துவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
தலைவர்
இன நல்லுறவிற்கான தேசிய வேலைத்திட்டம்