எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பொது நூலகம் பாடசாலைகள் ரீதியாக தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு (5) ஓட்டமாவடி பொது நூலகத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பொது நூலகத்தின் நூலகர் எம்.எம். பாத்திமா பானு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.