காரைதீவு சகா-
பழமை வாய்ந்த பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கான ஸ்தம்ப மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
இதில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்
புதிய கட்டிட புனருத்தாரண திருப்பணிகள் இடம்பெற்றுவருகின்றது. அமைச்சர் மனோகணேசன் இருபது இலட்சம் ரூபாய் நிதி முதற்கட்டமாக ஜே. பிரகாஸின் முயற்சியினால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த நிதியொதுக்கீட்டிற்கான வேலைகள் தற்போது ஆரம்பித்துவைக்கப்பட்டிருக்கின்றன.
அதனடிப்படையில் ஆலயத்தின் ஸ்தம்ப மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயங்களின் தலைவர் என்.இராஜேந்திரன் தலைமையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சபாரெத்தினம் குருக்களினால் பூசை வழிபாடுகள் கிரியைகளுடன் இடம்பெற்றது.
அத்துடன் ஆலய செயலாளர் ரி.மதன் பொருளாளர் கே.சிவலோகநாதன்இந்து இளைஞர் மன்ற தலைவர் கி.அசோக்குமார் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஆலய நிருவாகசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் பங்குபற்றி அடிக்கல் நட்டனர்.