கந்தளாய் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 270 சாராய போத்தல்களை கொண்டு மூன்று சந்தேக நபர்களும்,மூன்று வாகனங்களும் பொலிஸாரால் கைது


எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 270 சாராய போத்தல்களைகொண்டு மூன்று சந்தேக நபர்களும்,மூன்று வாகனங்களும் பொலிஸாரால் இன்று(16) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த மூவரையே கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் தினத்தன்று ஜீப் வண்டியில் கொண்டு சென்ற போதே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் சாராயம் கொண்டூ செல்வதாக கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஒரு ஜீப்,முச்சக்கர வண்டி,மோட்டார் சைக்கில் ஒன்றும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு ,கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும்பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேர்தலுக்காக நாடு முழுவதும் மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையிலேயே மூவர் கைதாகியுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -