அம்பாறையில் நாளை மு.கா. ஏற்பாட்டில் சஜித் பங்கேற்கும் 05 பிரசாரக் கூட்டங்கள்

அஸ்லம் எஸ்.மௌலானா-
ம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நாளை சனிக்கிழமை (09) ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 05 தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொள்கின்றார்.
கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய இடங்களில் இப்பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ள இப்பிரசாரக் கூட்டங்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
இக்கூட்டங்களுக்கான ஒழுங்குகளை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் முன்னெடுத்து வருகின்றனர்.
இக்கூட்டங்களை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது இக்கூட்டங்களுக்கான ஒழுங்கமைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் வட்டாரங்கள் தோறும் சஜித் பிரேமதாசாவுக்கான தேர்தல் நடவடிக்கை காரியாலயங்களை அமைப்பது, வீட்டுக்கு வீடு சென்று மக்களை விழிப்பூட்டுவது, கருத்தரங்குகளை நடாத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதுடன் அவை குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் பைசால் காஸிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், எம்.ஐ.எம்.மாஹிர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், சட்டத்தரணி அன்சார் மௌலானா உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனை தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் முன்னிலையில் இடம்பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -