சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணி அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த முதலாவது பிரசாரக் கூட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணி அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணி தலைவர் அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, பாராளுமன்ற ஆருபினர் ஏ. அரவிந்த்குமார் தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் எம். உதயகுமார், சோ. ஸ்ரீதரன், எம். ராம், “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திசிகாமணி தொழிலாளர் தேசிய சங்கம் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், மலையக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் ஏ. லோறன்ஸ மற்றும் பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...