இன்று வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் !

 

வி.ரி.சகாதேவராஜா-

ம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில்
புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சுப வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கும்பாபிஷேகத்தை இன்று காலை 10 மணியளவில் சிறப்பாக நடாத்தினார்கள்.

கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் கர்மாரம்பம் நடைபெற்றது.

மறுநாள் வெள்ளிக்கிழமை 10.04.2026 மற்றும் 11.04.2026 சனிக்கிழமை ஆகிய தினங்களில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலய தலைவர் பொன். ரமேஷ்,
செயலாளர் குமரேசன் ,
பொருளாளர் யோகேந்திரன் ஆகியோருடன் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :