இல‌ங்கை ம‌க்க‌ள் ம‌க்காவின் ஹ‌ஜ் பிறை அறிவித்த‌லை ஏற்று அர‌பா தின‌ம், ஹ‌ஜ் பெருநாள் எடுக்க‌ வேண்டும்வ்வ‌ருடமும் வ‌ழ‌மை போல் ஹ‌ஜ் பிறைப்பிர‌ச்சினை வ‌ரும் என்ப‌தால் இல‌ங்கை ம‌க்க‌ள் ம‌க்காவின் ஹ‌ஜ் பிறை அறிவித்த‌லை ஏற்று அர‌பா தின‌ம், ஹ‌ஜ் பெருநாள் எடுக்க‌ அ.இ. ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மியதுல் உல‌மா க‌வுன்சில் தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி தெரிவித்துள்ள‌தாவ‌து,

இம்மாத‌ துல்க‌ஃதா ம‌க்காவின் உம்முல்குரா க‌ல‌ண்ட‌ர் ப‌டி 29நாளில் முடிகிற‌து. அத‌ன் ப‌டி ஜூன் 6ந்திக‌தி உல‌க‌ம் முழுவ‌தும் துல்ஹ‌ஜ் 1ம் பிறையை காண‌ முடியும். 7ந்திக‌தி துல்ஹ‌ஜ் மாத‌ 1ம் திக‌தியாகும். இத‌ன் ப‌டி ஜூன் 15ந்திக‌தி அர‌பா நோன்புடைய‌ நாள், 16ந்திக‌தி ஹ‌ஜ் பெருநாளாகும்.

ஆனாலும் இல‌ங்கையில் அ.இ. ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மாவின் அறிவிப்பின் ப‌டி ஜூன் 7ந்திக‌தி பிறை பார்க்க‌ சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து. அந்த‌ வ‌கையில் 17 ந்திக‌தி ஹ‌ஜ் பெருநாள் வ‌ர‌லாம்.
ஜூன் 6ந்திக‌தி ம‌க்காவில் பிறை தென்ப‌ட்டால் இல‌ங்கையிலும் பிறை தெரியும் என்ப‌து உறுதி. ச‌வூதிக்கு ஒரு பிறை, இல‌ங்கைக்கு ஒரு பிறை, இந்தியாவுக்கு ஒரு பிறை என்ப‌தெல்லாம் முட்டாள்த‌ன‌மான‌ க‌ருத்து என்ப‌து அண்மைக்கால‌மாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும்.

ஆக‌வே இம்முறையும் பிறையில் முர‌ண்பாடுக‌ள் ஏற்ப‌ட‌ வாய்ப்புக்க‌ள் உள்ள‌து. முர‌ண்பாடுக‌ள் ஏற்ப‌ட்ட‌ பின் அவ‌ர்க‌ள் அப்ப‌டி, இப்ப‌டி என‌ விம‌ர்சிப்ப‌தை விடுத்து , மார்க்க‌த்துக்கும் விஞ்ஞான‌த்துக்கும் முர‌ண்பாடாத‌ வ‌கையில் தீர்வை தேடுவ‌து அவ‌சிய‌மாகும்.

ந‌ம‌து இல‌ங்கையில் 6ந்திக‌தி பிறை காண‌ முடியாம‌ல் போனால் ஹ‌ஜ் வ‌ண‌க்க‌ங்க‌ள் ம‌க்காவிலேயே ந‌டை பெறுவ‌தாலும், ஹாஜிக‌ள் அர‌பா நாளில் கூடும் அர‌பா நாள் நோன்பு உல‌க‌ முஸ்லிம்க‌ளுக்கு ஒரே நாளில் கிடைக்கும் வ‌கையிலும் ம‌க்காவின் பிறை அறிவித்த‌லை இல‌ங்கையிலும் ஏற்று செய‌ற்ப‌டுத்தி ஒற்றுமைப்ப‌டுமாறும் ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா க‌வுன்சில் கேட்டுக்கொள்கிற‌து.

முபாற‌க் மௌல‌வி முப்தி
ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா க‌வுன்சில்,
க‌ல்முனை.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :