நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
சஜித் பிரமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்து ஐந்தாண்டு காலத்தில் மலையக மக்களின் என்பது வீதமான வீட்டுப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்ச்சி இராஜாங் கஅமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணி அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணி தலைவர் அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, பாராளுமன்ற ஆருபினர் ஏ. அரவிந்த்குமார் தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் எம். உதயகுமார், சோ. ஸ்ரீதரன், எம். ராம், “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திசிகாமணி தொழிலாளர் தேசிய சங்கம் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், மலையக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் ஏ. லோறன்ஸ மற்றும் பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
பொதுஜன பெரமுன வின் ஜனாாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருுந்த போதே எக்னலிகொட உளளிட்ட பல சுட்டுக்கொல்லப்பார்கள் அதே போல எல்லாாத்துறைகளிலும் ராஜபக்ஷக்களின் அதிகாரம் கொண்டதாகவே காணப்பட்டது ராஜபக்ஷ குடும்பத்தில் யாாராவது வியாபாரம் செய்பவர்கள் உண்டா? இல்லை அப்படியானால் பிரமாண் ட. மாளிகைகளை கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்வது எப்படி
பணம் எங்கிருந்து வந்தது தற்போது அலிபாபா திருடர்ககளும் ராஜபக்ஷ குடும்பங்களுமே அங்கே இருக்கிின்றார்கள் ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியில் திகா. ராாதா. மனோ போன்ற இன்னும் பலர் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இளம் தலைமைத்துவங்களை ஒன்றிினைந்துள்ளோம் எதிர்வரும் நவம்பர் 16 ம் திகதி சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவது உறுதி அவரது ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் மலையக மக்களின் குடிியிருப்பு பிரச்சினை 80 வீீீீதம் நிறைவு பெறும் என உறுதியளிக்கிறேன் என்றாார்.