நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் இளைஞர்கள் 2019ஆம் ஆண்டுக்கான இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கபடி போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்களுக்கு இறுதிப் போட்டிக்கான சீருடை மற்றும் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று நிந்தவூரில் இடம்பெற்றது.
மதீனா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் நிந்தவூர் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் செயலாளருமான ஏ.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட், மதீனா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எஸ்.எம்.இஸ்மத், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை மருந்துகலவையாளர் ஏ.எம்.சித்தீக், மதீனா விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர் ஏ.எம்.றஸ்மி, விளையாட்டுக் கழக வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாடசாலைக்கிடையிலான 17வயதுப்பிரிவுக்கான கபடி போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை தேசிய மட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களையும் இராஜாங்க அமைச்சர் பாராட்டி கௌரவித்தார்.
கபடி போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்களுக்கான சீருடை Atham Bawa & Sons நிறுவனத்தின் அனுசரனையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.