ஹக்கீம் மீது பெரும்பான்மை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வாக்குகள் சேர்க்கும் இனவாதக் கும்பல்

ஆதிப் அஹமட்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மீது பெரும்பான்மை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி அதன் மூலம் தங்கள் அணிக்கு வாக்குகளை சேர்த்துக்கொள்ளும் முயற்சியில் இனவாதக்கும்பல்?

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னர் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்ற கைங்கரியத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னணி முக்கியஸ்தர்கள் பலரும் தொடராக செய்து வருகின்றார்கள்.

அந்த வரிசையில் முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரையும் குறித்த குண்டுத்காக்குதலை திட்டமிட்டு செயற்படுத்திய தீவிரவாதி சஹ்ரானோடு தொடர்புகள் உள்ளதாக சித்தரித்து பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய போதிலும் அவை எதுவும் உண்மைத்தன்மை அற்றது என் பின்னரான நாட்களில் நிரூபிக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் அவர்கள் திட்டமிட்டு அரங்கேற்ற காரணம் எதிர்வர இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தலில் “தேசிய பாதுகாப்பு” என்ற மையப்பொருளை மையமாக வைத்து தீவிரவாதத்தை ஒழிக்க தாங்களே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்ற எண்ணத்தை ஆணித்தரமாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைத்து அதனூடாக ஆட்சி கதிரையை இலகுவாக பெற முடியுமென்ற எண்ணமேயாகும்.இதனால் தனிப்பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரம் ஆட்சி பீடத்தினை கைப்பற்றிக்கொள்வதே அவர்களின் மறைமுக எண்ணமாகும்.

எனினும் குறித்த “தேசிய பாதுகாப்பு” என்ற மையப்பொருளை முன்னிறுத்திய பிரச்சாரமானது ஆரம்பத்தில் பெரும்பான்மை மக்களிடத்தில் ஓரளவு உத்வேகத்தினை ஏற்படுத்தியிருந்தாலும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் குறித்த பிரச்சாரம் வலுவிழந்து கொண்டே வருகின்ற நிலமை மாற்றமடைந்தது.

அதிலும் குறிப்பாக தேசிய பாதுகாப்புக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய அரசில் கடந்த கால யுத்த களத்தில் நின்று பணியாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களை தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தனது பிரச்சார மேடையில் அறிவித்ததும் அவர்களின் இந்த பிரச்சாரமானது முற்றாக வலுவிழந்ததாகவே காணப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களை பொறுத்த வரையில் அவர் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கின்ற போதிலும் அவர் நாட்டில் வாழும் பல்லின மக்களாலும் குறிப்பாக பெரும்பான்மை மக்களால் பெரிதும் மதித்து நேசிக்கப்படும் ஒரு அரசியல் தலைவர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவராக அவர் இருக்கின்ற போதிலும் கண்டி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளோடு பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒருவர்.

அது மாத்திரமல்லாது பெரும்பான்மை மக்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவராக அவரையே அங்கீகரிக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதிக்கு பின்னர் முஸ்லிம் சமூகமானது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது முஸ்லிம்கள் சார்பாக தேசிய தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களின் குரலை மாத்திரமே பெரும்பான்மை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது யாவரும் அறிந்த உண்மையே.முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு கருதி அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த போது எந்த குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத றவூப் ஹக்கீம் ஏன் பதவி விலக வேண்டும் என்பது பல பௌத்த துறவிகள் பலரினதும், பல பெரும்பான்மை சகோதரர்களினதும்,தமிழ் சகோதரர்கள் பலரினதும் ஆதங்கமாய் இருந்தது.அதற்கான நியாயமான காரணங்களை தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் விளக்கிய பிற்பாடுதான் பல்லின சமூக மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அந்தளவு சகல இன மக்களும் மதித்து நேசிக்கக்கூடிய ஒரு தலைவராகவே அமைச்சர் றவூப் ஹக்கீம் காணப்படுகின்றார்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதித்தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில் பயங்கரவாதி சஹ்ரானோடு எவ்வித சம்பந்தமுமில்லாத றவூப் ஹக்கீம் அவர்கள் சஹ்ரானோடு உள்ள காட்சி ஒன்றை தங்களின் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கலூடாக பகிர வைத்து அதை இன்று மிகப்பெரிய பேசுபொருளாக மாற்றியிருக்கிறார்கள் குறித்த தரப்பினர்.

இதனை மிகப்பெரும் பிரச்சார பொருளாக மாற்றி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் மீது பெரும்பான்மை இன மக்கள் கொண்டுள்ள நல்ல நம்பிக்கையினையும், மதிப்பையும் கேள்விக்குறியாக்குவாதனூடாக தற்போதைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகளை சிதறடித்து தங்களுக்கான வாக்குகளை அதிகரித்துக்கொள்ளும் ஒரு செயற்பாடாகவே இதனைப்பார்க்க வேண்டியுள்ளது.

ஏனையவர்களை விட தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் மீதே இக்குற்றச்சாட்டை சுமத்தினால் சற்று அதிகரித்த அதிர்ச்சியொன்று பெரும்பான்மை மக்களிடம் ஏற்படலாம் என்பது கூட அவர்களின் நம்பிக்கையாக இருக்கலாம்.ஆக இது பெரும்பான்மை வாக்குகளை ஒரு இடத்தை நோக்கி ஒருமுகப்படுத்தும் அரசியல் சித்த விளையாட்டின் அடுத்த கட்டமே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -