கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்தின் கீழுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும் நூல் வெளியீடும் கடந்த சனிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் மற்றும் கௌரவ அதிதியாக உதவிச் சுங்க அத்தியட்சகர் முஸ்தபா முர்ஷிதீன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒவ்வொரு வருடமும் க.பொ.த மாணவர்களினால் வெளியீட்டு வைக்கப்படும் உதய நிலா நூல் வெளியீடும் இடம்பெற்றதோடு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களினால் பாடசாலைக்கு வெண்பலகை அன்பளிப்பும் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.