வெற்றி பெற்றது பஷீரின் வியூகம் வழிக்கு வந்தது மொட்டு கட்சி


எஸ்.அஷ்ரப்கான்-
ருகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் கட்டு பணம் செலுத்திய வியூகம் வெற்றி பெற்றதன் அடிப்படையிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் விலகி உள்ளார் என்று தெரிகின்றது.
பெருந்தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் தந்திருக்காத நிலையிலேயே் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாக கொண்டே இவர் கட்டுப்பணம் செலுத்தினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கட்டுப்பணம் செலுத்திய விடயத்தை அறிந்து கொண்ட மொட்டு கட்சியின் அதிமுக்கியஸ்தர்கள் உடனடியாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பினருக்கு தகவல் சொல்லி அனுப்பி இருக்கின்றனர்.இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
முன்னதாக எழுத்துமூலம் ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கு மொட்டு கட்சி அழைப்பு விடுத்து இரு சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி இருந்தது. மொட்டு கட்சியினர் கேட்டமைக்கு அமைவாக முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகளை பரிசீலனைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பினர் எழுத்தில் வழங்கி இருந்தனர். ஆயினும் கட்டுப்பணம் செலுத்தப்படுகின்ற வரை எந்த உத்தரவாதமும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக மொட்டு கட்சியிடம் இருந்து வழங்கப்படவில்லை என்பதுடன் மீண்டும் தொடர்பாடல் இடம்பெறவில்லை. இதே நேரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸ தற்போதைய அரசியல் அமைப்புக்கு மாற்றமாக எதையும் செய்யவே மாட்டார் என்றும் தற்போதைய அரசியல் அமைப்புக்கு விரோதமான எந்த ஒப்பந்தத்தையும் யாருடனும் மேற்கொள்ள மாட்டார் என்றும் பகிரங்கமாக தெரிவித்து வருகின்ற நிலையில் இவருடன் பேசுவதால் எந்த பயனும் முஸ்லிம் சமூகத்துக்கு இல்லை என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கண்டு கொண்டது.
இந்நிலையில் நிபந்தனை அற்ற முறையில் யாருக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆதரவு வழங்காது என்பதை உறைப்பாகவும், உரத்தும் சொல்லி அழுத்தம் கொடுக்கவே பஷீர் கட்டுப்பணம் செலுத்தினார் என்பதை உணர்ந்து கொண்ட மொட்டு கட்சியின் அதிமுக்கியஸ்தர்கள் தேர்தல் பளு காரணமாகவே மீள தொடர்புக்கு வரவில்லை என்றும் முஸ்லிம்கள் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மீது ஏற்கனவே உரிய கவனம் செலுத்தி விட்டனர் என்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பினருக்கு விளக்கம் கொடுத்து அவசர சந்திப்புக்கும், நிறைவு பேச்சுவார்த்தைக்கும் உடனடியாக ஏற்பாடு செய்து உள்ளனர். ஆகவேதான் வியூகம் வெற்றி பெற்றதை அடுத்து பஷீர் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் விலகினார். தொடர்ந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி நிந்தவூரில் இருந்து அவசரமாக கொழும்புக்கு பயணமாகி உள்ளார்.
இவர்களுடன் இந்நாட்களில் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட மொட்டின் அதிமுக்கியஸ்தர்கள் நேருக்கு நேர் பேசி உத்தரவாதம் வழங்கி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டு கொள்வார்கள் என்று மொட்டு கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. இதே நேரத்தில் வேட்பு மனு தாக்கலில் இருந்து விலகி கொண்டது தொடர்பாக பஷீர் சேகு தாவூத் ஊடக அறிக்கை வெளியிட்டு அறிய தருவார் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒபரேசன் வெற்றி, நோயாளியையும் பிழைக்க வைப்பதற்கான அடுத்த வியூகங்கள் தீட்டப்படுகின்றன என்றும் தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -