அம்பாறையில் காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அட்டகாசம் செய்து வருகின்ற காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களிற்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திங்கட்கிழமை (7) நள்ளிரவு கனரக வாகனங்களின் உதவியுடன் இரு காட்டு யானைகள் இவ்வாறு பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது எமது ஊடகவியலாளரின் கமராவில் பதிவாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை பொதுமக்களின் செயற்பாட்டினால் தோல்வியடைந்திருந்தது.
தற்போது சுமார் 35 க்கும் அதிகளவான யானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்து அண்மைக்காலமாக பெரும் சேதங்களை விளைவித்து வருகின்றன.
குறிப்பாக நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை உகண தமண பிரதேச செயலாளர் பகுதிகளில் குறித்த யானைகள் நடமாடி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும் இப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 40க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -