சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை தொடந்து வருகின்றது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல். சூரியபண்டார தலைமையின் கடந்த புதன்கிழமை(8) முதல் வெள்ளிக்கிழமை வரை அதிகாலை இடம்பெற்று வருகிறது.
குறித்த நடவடிக்கையானது அவரது நேரடி வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வினை மேற்கொண்ட 2 கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு நடைபெறும் இடங்களும் முற்றுகையிடப்பட்டன.
இதனை தொடர்ந்து சம்மாந்துறைஇ சவளகடைஇ கல்முனை பகுதிகளுக்குரிய பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடனான சந்திப்பொன்றை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரியபண்டார மேற்கொண்டதோடு இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும்இ சட்டவிரோத மண் அகழ்வுகளினால் குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும்இ பிரதேச பாதுகாப்பு சம்மந்தமாகவும் கலந்துறையாடியதுடன் எதிர்வரும் காலங்களில் சட்ட விரோத மண் அகழ்வு முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.