எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்


ல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.
காலை 7அணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிவரை இடம்பெறும்
28 பிரதேச சபை அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுகிறது.
53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 155 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
47 மத்திய நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் மாலை 7.00 மணியளவில் எண்ணப்பட்டுவிடும் என்று தெரிவித்த அவர் இரவு 10 மணியளவில் அனைத்து முடிவுகளையும் அறிவிக்கக்கூடியiதாக இருக்கம் என்று காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி கே.யூ.சந்திரலால் தெரிவித்தார்.
750 அரச ஊழியர்கள் தேர்தல் பணிகளில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் . காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி தெரிவித்தார். 800 பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸ் நடமாடும் பாதுகாப்பு சேவைகளும் இடம்பெறுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -