கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் முள்ளந்தண்டு தொடர்பான சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
நோயாளியொருவர் நீண்ட காலமாக முள்ளந்தண்டு நோயினால் பாதிக்கப்பட்திருந்தார்.இதனால் இவருக்கு அடிக்கடிமுதுகுவலி , வலதுகால் பகுதியில் வலி ஆகிய அறிகுறிகள் தென்பட்டன.
இதனால் இவர் தனது நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தனது ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பெரும் அவதி நிலையுடன் காணப்பட்டார் .
முள்ளந்தண்டின் இடைத்தட்டு விலகியதன் காரணமாக முண்ணான் நரம்பு இவருக்கு பாதிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை(LAMINECTOMY) மேற்கொள்ளவேண்டியேற்ப்பட்டது.
கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் .ரகுமான் அவர்களின் வழிகாட்டலில் வைத்தியசாலையின் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கே.காண்டீபன் அவர்களின் தலைமையிலான வைத்திய குழுவினர் இன்று (10/10/2019) இவ் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்க்கொண்டனர்.
இவ் வைத்தியசாலையின் வரலாற்றில் முதன் முறையாக இவ் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.