ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை காரியாலயம் திறப்பு

பாறுக் ஷிஹான்-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை காரியாலயம் சனிக்கிழமை (05) காலை 11 மணியளவில் கல்முனை தரவைப்பிள்ளையார் கோயில் அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி பிரசார முக்கியஸ்தரான அஹமட் புர்க்கானின் தலைமையில் திறந்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவின் பொறுப்பாளர் மில்பர் கபூர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்இ ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது தலைமை உரையாற்றிய அஹமட் புர்கான்

முஸ்லிம் தலைவர்களான அமைச்சர் ரவூப் ஹக்கீமாக இருந்தாலும் சரி அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருந்தாலும் சரி இவர்கள் பொதுஜன பெரமுன கட்சியை பற்றி பிழையான விமர்சனங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த முஸ்லிம் தலைமைகள் எந்தளவு பிழையானவர்கள் என்பதை முஸ்லிம் மக்கள் ஏன் இன்னும் உணரவில்லை . கடந்த 2010ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஆதரவை சரத்பொன்சேகாவிற்கு தெரிவித்துவிட்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அமைச்சுப்பதவிகளை பிச்சைக்கேட்டு சென்றவர்கள் தான் இந்த முஸ்லீம் கட்சியினர். எனவே முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் இவர்களை நம்பி இவர்களது சொற்களுக்கு செவிசாய்த்து மீண்டும் மீண்டும் வரலாற்று தவறை செய்துவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -