எல்பிட்டிய பிரதேச சபை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம்


ல்பிட்டிய பிரதேச சபைக்காக  நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்றுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி சோமரட்ன விதாரனபதிரன தெரிவித்தார்.
இந்தக் கட்சிக்கு 23 372 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இந்த கட்சியின் சார்பில் 17 உறுப்பினர்கள் பிரதேச சபைக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜக்கிய தேசிய. கட்சிக்கு 10 113 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. கட்சியின் சார்பில் 7 உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 5273. இக்கட்சியிலிருந்து பிரதே சபைக்கு மூன்று உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி 2435 வாக்குகளை பெற்று 3 உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்டுள்ளது அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 42 100. நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 597
53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களுள் 75 சதவீதமானோர் வாக்களித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 155 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -