திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து கிராமப் புறங்களில் பிரபலங்கள் பலரும் படையெடுத்து வருகின்றனர்.
இன்றைய தினம் (2) திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர் மற்றும் திருகோணமலை நகரம் போன்ற பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் கட்சி ஆதரவாளர்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலுள்ள கிராமப் புரங்களில் உள்ள முக்கிய கட்சிஆதரவாளர்களை சந்தித்து வருகின்றனர்.
அத்தோடு அனைத்து இடங்களிலும் சஜித் பிரேம தாஸவின் சுவரொட்டிகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப்,சந்தீப் சமரசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் இணைந்து கட்சி ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு தேடி வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கிராம புறங்களில் சிறு சிறு கிளைக்காரியங்கள் திறந்தும் வருகின்றனர்.