எதிர்காலத் தலைவர்களை சீர்படுத்தும் மகத்தான பணி கல்விக்கு உண்டு. கெளரவ காதர் மஸ்தான்.

லகின் வருங்காலத் தலைவர்களான சிறுவர்களை சீர்படுத்தி நேர்படுத்தும் மகத்தான வகிபாகத்தை கல்வியே செய்கின்றது.
எமது தேசத்தை கட்டியெழுப்பக்கூடிய வல்லமையும் திடவுறுதியையும் கொண்ட தலைவர்களை உருவாக்கி அவர்களை எதிர்காலங்களில் கரங்களில் ஒப்படைக்கும் அரிய பணியை நாம் நிறைவான மனதுடன் முன்னெடுத்துச் செல்வோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் குறிப்பிட்டார்.
புத்தளம் மணல்தீவு றோ.க.த.கலவன் பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் ஏ.டீ. நிக்ஸன் நோயல் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

 பாடசாலைகள் அரசியலால் பீடிக்கப்பட்டு அவதியுறுகின்ற அவலநிலையை அவதானிக்கிறோம். இந்த நிலை மாற்றப்படல் வேண்டும்.
சுயாதீனமாக முடிவெடுத்து முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடுகின்ற ஸ்தாபனங்களாக கல்விக் கூடங்கள் மாறுகின்ற போது நல்ல அறுவடைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
இப்பாடசாலையிலிருந்தும் சீர்மைமிக்க எதிர்காலத் தலைவர்கள் உருவாக வேண்டும் என ஆசிக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் மேற்படி பாடசாலை பிரதி அதிபர் அருட்சகோதரி, லூசிஸ்டா. புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை வேட்பாளர்களான,  எம்.ரெஜினோல்ட் மற்றும் எஸ்.சிராஜ்
பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான ஜனாப்.வாஜித் ஜனாப்.சபூர் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -