கல்முனையில் இன்று (24)இடம்பெற்றது .
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தகர் அஹமட் புர்கான் தலைமையில் தேர்தல் காரியாலயத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது
இதன் போது மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறவுள்ளது.இது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த தேர்த்தலாகவே நான் கருதுகிறேன்.
பிரதானமாக சஜித்பிரமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் வேடப்பாளர்களாக களமிறங்கிக்யுள்ளனர் இந்த இரண்டு பேரில் யார் இந்த நாட்டை சரியாக கொண்டு செல்லக்கூடியவரை நாம் தெரிவு செய்ய வேண்டும் .
மேலும் வட கிழக்கில் அபிவிருத்தியை செயத்து கடந்த ஆட்சியிலாகும் முஸ்லிங்களை வடக்கில் மீள்குடியேற்றம் செய்தது மாத்திரமல்லாமல் நான் கொழும்பு மேயராக இருந்த கால கட்டத்தில் கொழும்பு நகரை ஓர் முதல் தர நகராக மாற்ற கோடடாபய ராஜபக்ஸ எனக்கு உதவினார் . மேலும்
அக்காலத்தில் ஜாதி ,இன பாரமல் எல்லா மக்களுக்கும் கொழும்பில் வாழ சமமான நிலையை ஏற்ப்படுத்தினார்.
கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவார்,நாட்டின் சுதந்திரம் மற்றும் அபிவிருத்தி, பொருளாதாரம் முன்னேற்றுவார்.ஆகவே இந்த தேர்தலில் யாரை தெரிவு செய்வது என்பது மிக இலேசான விடயமாகும்.
இந்த தேர்த்தலில் இனவாதத்தை விற்க இன்று முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர் .
எமது முஸ்லிம் அரசியல் வாதிகள்
எம்மை சரியான அரசியல் பாதையில் அழைத்து சென்றனரா ?
இவர்கள் அரசியல் விவகாரம் செய்கிறார்களா? அரசியல் வியாபாரம் செய்கிறார்களா ?அல்லது
அரசியல் விபச்சாரம்
என்று கேள்வியேழுப்பினார்.
இந்த தேர்தல் நிச்சயமாக கோட்டாபய ராஜபக்ஸ நிச்சயமாக ஜனாதிபதியாகுவார்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை இந்த
முக்கியத்துவமான வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளராக வேண்டும்.
என்றார்.
இதன் போது முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா , அஷ்ஷேக் மசூர் மெளலானா ஆகியோர் கலந்துகொண்டனர்.