Tamil Letter ஊடக நிறுவனம் வருடாந்தம் துறை சார்ந்தவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்று Ainah Beach Garden யில் இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களில் சிறந்த உள்ளூராட்சிமன்ற உறுப்பினராக ஓட்டமாவடி பிரதேச சபையின் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனம் வருடம் ஒன்றுக்கு பத்து துறைசார்ந்தோர்களை கௌரவித்து வருகிறது. இதில் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவி மாவட்டத்தின் சிறந்த உள்ளூராட்சிமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பைசல் காஸீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான மன்சூர், எம்.இஸ்மாயீல், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.