பேதங்கள் பாராமல் மூவின மக்களுக்கும் சேவை செய்பவர்தான் அமைச்சர் மனோ- இணைப்பாளர் றிஸ்கான் முகம்மட் புகழாரம்....!!




குறுகிய சுய இலாப அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் நின்று இன, மத, மொழி பேதங்கள் பாராமல் நாட்டு மக்கள் எல்லோருக்கும் மகத்தான சேவைகளை புரிபவராக அமைச்சர் மனோகணேசன் விளங்குகின்றார் என்று தேசிய நல்லிணக்கம், அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோகணேசனின் அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்பாளர் றிஸ்கான் முகம்மட் தெரிவித்தார்.
தேசிய மொழி கல்வி நிறுவனத்தால் இம்மாவட்டத்தை சேர்ந்த தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 12 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சிங்கள மொழி கற்கை நெறியின் நிறைவு நாள் விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதை தலைமை தாங்கி நடத்தியபோது றிஸ்கான் முஹமட் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஆயினும் அம்பாறை மாவட்டத்திலும் அபரமிதமான வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார், ஆனால் இவருக்கு இம்மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் கிடையாது என்பதையும் சொல்லி வைக்கின்றேன், ஏனைய அமைச்சர்கள் அம்பாறை மாவட்டத்துக்கு உரிய சேவைகளை வழங்க தவறுகின்றனர், ஆயினும் மனோ கணேசன் இம்முறையும் கணிசமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு தந்திருக்கின்றார, எனது வேண்டுகோளை ஏற்று கோடி கணக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு உள்ளார், எமது மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் எமது வேலை திட்டங்கள் அனைத்துக்கும் உறுதுணையாக இருக்கின்றார், அவருக்கு எனது விசேடமான நன்றிகள் என்றார்.
கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இவ்விழாவில் பேராளர்களாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாடு மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.பிரதீஸ்கரன், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர் ,சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீத், இளைஞர் சேவை உத்தியோகத்தர் வீ.எம்த்,முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம் டில்சாத் ,
சிங்கள மொழியை கற்பித்து கொடுத்த வளவாளர்களான என்.எம்.எம்.புவாட், ஏ.எம்.முஜீப், ஏ.பி.ஆரிப், கே.பி.பிரதீப் போன்றோர் முன்னிலையில் திறமைகளை வெளிக்கொணர்ந்து காண்பித்தார்கள். தமிழர் ஊடக மையத்தின் தலைவர் த. தர்மேந்திரா சிறப்பு கவிதை வழங்கினார். அதிதிகள் மற்றும் வளவாளர்கள் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -