அதிபர்,ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் 11 ம் திகதி வரை தொடர் வேலைநிறுத்தத்தில் களமிறங்கபோவதாக அதிபர், ஆசிரியர் தொழிற்ச்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில் அதனை பிற்போடுமாறு ஆசிரியர் தொழிற்ச்சங்கங்களின் அமைப்பாளர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கர்மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சகல பாடசாலைகளிலும் முக்கிய நிகழ்வுகளாக 29.9.2019 முதல் 8.10.2019 வரை நவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினங்களில் அதிபர்,ஆசிரியர்களின் சம்பள போராட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையால் அதனை பிற்போடுமாறு ஆசிரியர் தொழிற்ச்சங்கங்களின் அமைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கொழும்பில் 30.10.2019 நடைபெறும் அதிபர்,ஆசிரியர் தொழிற்ச்சங்கங்களின் முக்கிய கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.