அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;
முன்னாள் தீவிர ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் என்ற வகையில் இந்த பண்டாரநாயக்க நினைவு விழாவை ஏற்பாடு செய்ய கிடைத்தமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பது மிகவும் பலம்வாய்ந்த ஒரு கட்சி, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை 2015ஆம் ஆண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஒரு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அதேபோன்று எதிர்வரும் காலத்திலும் இந்த நாட்டை ஆட்சி செய்யப்போவது ஒரு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினாரே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, செயலாளர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர, மகாஜன எக்சத் பெறமுண தலைவர் தினேஷ் குணவர்தன, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.