ஓட்டமாவடி - பதுரியா, மாஞ்சோலை எல்லைக் காணி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து முஸ்லிம் தரப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று (7) பதுரியா நகர் அல் மினா வித்தாயாலயத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
ஓட்டமாவடி - பதுரியா, மாஞ்சோலையில் தற்போது ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினையின் போது தமிழ், முஸ்லிம் மக்களின் செயல்முறைகள் மிகவும் கீழ்த்தரமாக காணப்படுகின்றது. காணிப் பிரச்சினை தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பிரதேச செயலகத்திற்கே உண்டு பொலிஸார் பிரச்சினைகள் வளராமல் இருப்பதற்கு மட்டும்தான் செயற்படுவார்கள்.
நேற்று இடம்பெற்ற கல்வீச்சு சம்பவத்தை நீங்கள் சின்னச் சம்பவமென்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அதனூடாக இரண்டு சமூகத்திற்கு மத்தியில் ஒரு மோதல் ஏற்பட்டிருந்தால் அது முழு இடங்களுக்கும் பிரச்சினையாக மாறியிருக்கும்.
இந்த சூழ்நிலையில் பிரச்சினைகளைப் பெரிதாக்க இரு தரப்பிலும் பின்னின்று செயற்படுத்தக் கூடிய நபர்களும் இருக்கின்றார்கள். இதை நிறுத்த வேண்டும் எனும் எண்ணம் அவர்களுக்கு இருக்காது. அவர்களுக்குத் தேவை ஒரு குழப்பத்தை அந்த இடத்திடல் உருவாக்குவது.
நாங்கள் எங்களை நேசிப்பது போல, எங்களது பிள்ளைகளை நேசிப்பது போல, எங்களது நாட்டை நாங்கள் நேசிக்க வேண்டும்.
சட்டத்தை யாரும் கையிலெடுக்க வேண்டாம். சட்டத்தில் இருக்கின்ற அதிகாரத் தன்மையை நாம் அனைவரும் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும். யாராவது மத ரீதியாக, சமூக ரீதியாக, தேசிய ரீதியாக பிரச்சினைகளை உருவாக்கினால் அவர்களுக்கு பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்க இந் நாட்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே நாங்கள் இந்த தேசத்தின் பிரஜா உரிமையாக இருந்தால் இந்த தேசத்தின் சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் சட்டங்களை தெரியாதென்று கூற முடியாது அவ்வாறு கூறுவதும் ஒரு தவறாகும் என்றார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபர் மற்றும் பள்ளிவாசல் நிறுவாகத்தினர்கள், காணிகளின் உரிமையாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.