சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசியவாதிகளே! கல்வி அமைச்சரே! கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரே! கல்முனை வலய கல்விப்பணிப்பாளரே! சாய்ந்தமருது சமூகமே!
சாய்ந்தமருதின் இன்றைய நிலைக்கு யார் பொறுப்பு?
இந்நிலைக்கு காரணம் என்ன? அல் ஜலாலின் கட்டிடப் பிரச்சினை மட்டும்தான் காரணமா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? சாய்ந்தமருதில் ஒருவகையான குழப்பநிலை நீடிக்கவேண்டும் என யாரும் நினைக்கிறார்களா? என்ற கோணங்களில் எல்லாம் ஆராயவேண்டியுள்ளது.
அல் ஜலாலின் கட்டிடப் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளின் நிலைப்பாடு என்ன? ஏன் இவ்வாறான நிலை எற்பட்டது? சாய்ந்தமருது மக்களின் அதி உச்ச ஆதரவைப் பெற்ற பள்ளிவாசல் சமூகம் காத்திரமான முன்னெடுப்புக்களை எடுத்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்தவர்கள் யார்? இதன் காரணமாக அவர்கள் அடைந்துகொள்ள முனைவது என்ன? மாணவர்களுக்கு இன்று கிடைக்கவிருந்த கல்வியை தடுத்ததனூடாக இவர்கள் பெற்ற இலாபம் என்ன? சாய்ந்தமருது சமூகமே சிந்திக்க மாட்டீர்களா? அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்த்தல் அல்லது நீதிமன்றத்தை நாடல் என்ற எவ்வளவோ வசதிகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் தொடர் பாடசாலை பகிஷ்கரிப்பு சரியா?
பின்னிலையில் இருக்கும் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தின் கல்விமட்டம் ஓரளவு முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்களின் கல்வியைச் சீரழிக்கும் ஒரு யுக்தியாகக் கூட இவைகளைப் பார்க்க முடியும் இல்லையா?
சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசியவாதிகளே! கல்வி அமைச்சரே! கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரே! கல்முனை வலய கல்விப்பணிப்பாளரே! சாய்ந்தமருது சமூகமே! சாய்ந்தமருதில் ஏற்பாட்டுள்ள முறுகல் நிலைக்கு விரைந்து தீர்வை வழங்கு.