சமூகத்தில் ஓர் அங்கத்தவராக விசேட தேவையுடையோர் மதிக்கப்படல் வேண்டும் - பைஸர் முஸ்தபா


ஐ. ஏ. காதிர் கான்-

மூகத்தில் ஓர் அங்கத்தவராக விசேட தேவையுடையவர்களும் மதிக்கப்படல் வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார். 

கொழும்பு பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அங்கவீனர்களுக்கான சக்கரை நாற்காளிகள் வழங்கும் நிகழ்வு, ஓல்கொட் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெற்றது. புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் அனுசரணையில், "இயலாதோருக்குக் கை கொடுப்போம்" என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும்போது,
நாம் ஏனைய மக்களை எவ்வாறு மதிக்கின்றோமோ, அதேபோன்று விசேட தேவையுடையவர்களையும் சமூகத்தில் ஓர் அங்கத்தவராக மதித்தல் வேண்டும்.

எனவே, விசேட தேவையுடையவர்கள் இதனைக் கருத்திற்கொண்டு, தமக்குப் பொருத்தமான சுய தொழில்களை மேற்கொண்டு, தம்மை வளப்படுத்திக் கொண்டு சமூகத்தில் வாழப் பழகிக் கொள்ள முன் வர வேண்டும் என்றார். இதன்போது, விசேட தேவையுடையோருக்கு பைஸர் முஸ்தபா, மோட்டார் சைக்கிள்களையும் சக்கரை நாற்காளிகளையும் வழங்கி வைத்தார். 

 இந்நிகழ்வில், அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, பிரதி மேயர் மொஹமட் இக்பால், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -