500 மில்லியன் செலவில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத்தொகுதி நிர்மாணத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து..!



அஸ்லம் எஸ்.மௌலானா-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சின் 500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கல்முனை மாநகர சபைக்கு நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டிடத்தொகுதி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடபட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று வியாழக்கிழமை (26) அமைச்சின் கேப்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முன்னிலையில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களும் கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.எம்.இஸ்மாயில் அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எச்.எம்.நபீல், திட்டமிடல் பணிப்பாளர் எம்.நித்தியானந்தன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், எம்.நயீமுல்லாஹ், , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.எம்.ஹபீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், இணைப்பாளர் ஏ.சி.சமால்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

ஆறு மாடிகளைக் கொண்ட இப்புதிய கட்டிடத்தொகுதி 5,950 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதன் நிர்மாணப் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது. இக்கட்டிடத் தொகுதியில் மாநகர சபை நிர்வாக அலுவலகம், முதல்வர் செயலகம், சபா மண்டபம், கேட்போர் கூடம், வாகனத் தரிப்பிடம் மற்றும் பல்சேவை நிலையங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.

60 வருட கால பழைமை வாய்ந்த, தற்போதைய மாநகர சபை கட்டிடம் முழுதாக அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதன் நிரமாணப் பணிகள் அடுத்த ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -