பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்-
ளுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி அட்டன் என்பீல்ட், நோனாதோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது 15.09.2019 அன்று நோனாதோட்டத்தில் ஸ்ரீ செல்வவிநாயக ஆலயத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவண்ணம் காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இணங்காண்போம், ஏமாற்று தலைவர்களை வெளியேற்றுவோம், பாலித்த விடுதலைக்கு இறை ஆசி வேண்டி பூஜை செய்வோம் போன்ற பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது 75ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் செதுர் தேங்காய்கள் உடைத்து விசேட பூஜைகளிலும் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -