சஜித் வேட்பாளர்-ஐ.தே.மு. கட்சித் தலைவர்கள் ஏகமனதாக அறிவிப்பு!


க்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகியது சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று (24) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கட்சித் தலைவர்கள் ஏகமனதாக தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப, எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்குமாறும் கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்கள் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -