எம்.என்.எம்.அப்ராஸ்-
கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.எம்.பரக்கத்துள்ளா இலக்கிய துறைக்கு ஆற்றி வரும் பங்களிப்புக்காக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தி வரும் இலக்கிய விழாவையொட்டி இவ்வருடம் இலக்கியம் ஆய்வுத் துறைக்காக இளம் கலைஞர் விருது வழங்கி கெளவிக்கப்பட்டார்.
இவருக்கான விருது (23) மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மட்டக்களப்பில் இடம்பெற்ற விழாவில் வைத்து வழங்கப்பட்டது .
இளம் வயதில் அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்து மக்களுக்கு பல சேவையாற்றினார்.அத்துடன் இலக்கியம் ,ஆய்வு போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டு கவிதைகள்,சிறுகதைகள் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார்.
இலங்கையில் முஸ்லிங்கள் பரந்து வாழும் கிராமங்க ளுக்கு கள விஜயம் செய்து அது தொடர்பான வரலாற்று தொகுப்பு பற்றி தேசிய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
இவர் "கல்முனை மாநகரம்- உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகம் (2015),ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும்(2019) ஆகிய இரு நூல்களை வெளியிட்டுள்ளார். இதில் ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும் நூல் 2019 ம் ஆண்டிக்கான சிறந்த புலமைத்துவ ஆய்வு சார் இலக்கிய துறையில் அரச இலக்கிய விருதுக்காக விதைத்துரைக்கப்பட்ட மூன்று நூல்களுள் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.