திருகோணமலை சேருவில பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் யானைக் குட்டியொன்று பொது மக்களினால் வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.
யானைக்குட்டி பிறந்து இரண்டு கிழமையான நிலையிலே கைவிடப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற நிலையில் சிலரினால் காட்டில் தனிமையில் கைவிடப்பட்ட யானைக்குட்டியொன்று தத்தளித்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு வனஜீவராசி அதிகாரிகளுக்கு விறகு எடுக்கச் சென்றோரினால் தகவல் வழங்கப்பட்டு வனஜீவராசி அதிகாரிகள் யானைக் குட்டியை கைப்பற்றி கந்தளாய் பிராந்திய அலுவலகத்தினூடாக யால தேசிய சரணாலயத்தில் இன்றைய தினம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.