இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய இரு கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களுடன் சமூக வலயத்தள வாசகர்களின் கருத்துக்களை அறிய சிங்கள பாடகர் இராஜ் அவர்கள் பதிந்த பதிவுக்கு ஒரு மணிநேரத்தினுள் 27000 க்கும் அதிகமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.
குறித்த வாக்குகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபய ராஜபக்க்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜீத் பிரமதாசவை விட 79 சத வீதத்தால் முன்னிலை பெற்றுள்ளார்.
அத்துடன் மூன்றாம் கட்சியாக போட்டியிடும் ஜேவிபி தனித்து கேட்பதால் பொதுஜன பெரமுனவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாகவே உள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறு இருந்தாலும் மூன்றாம் தரப்பாக ஜேவிபி களமிறங்கி உள்ளமை பெரிய கட்சிகள் இரண்டுக்கும் பெரும் தலையிடியாக அமைந்துள்ளமையை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -