முஸ்லீம்களை அடக்கியாள நினைக்கும் இந்திய பிரதமர் மோடி-கஷ்மீர் மக்களை இருளில் தள்ளி விட்டுள்ளார்.

அபு அஹ்னப்-
ம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக உருவாக்க இந்திய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

சிறுபான்மை மக்களுக்கென்று இருந்த மாநில ஆட்சி அதிகாரத்தைப் பிடிங்கு எடுத்துள்ள இந்திய பிரதமர் கொடுங்கோல் ஆட்சிக்கு வித்திட்டிருக்கிறார். அயல்நாடுகளை ஆத்திரமூட்டியுள்ளார். குறித்த செயலை இந்திய சிரேஷ்ட அரசியல்வதி வைகோ மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமையை வார்த்தையால் விளக்க முடியாது. இணையத்தள வசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் எல்லாமே தடுக்கப்பட்டு இருள் சூழ்ந்த காடாக மாற்றி அம்மாநில மக்களை இந்திய அரசு கொடுமைப் படுத்திக் கொண்இருக்கிறது.

ஒரு போதும் இல்லாவாறு ஒரு இலட்சம் இராணுவத்தை அங்கு பாதுகாப்புக் கடமையில் நிறுத்தி அம்மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

அம்மாநில மக்கள் பசியால் பட்டணியால் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த  மாநிலத்துக்கு உதவ முன்வராத இந்திய பிரதமர் நிலத்தாசை பிடித்து அலைகிறார் என்பதனை வெட்ட வெளிச்சமாக இந்த செயல் காட்டி நிற்கிறது.

இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமரின் உரையைக் கூட காஷ்மீரி மக்கள் கேட்க முடியாத துரதிஷ்டவசமான நிலையில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -