மாற்று கட்சியின் சதி திட்டமே - போடைஸ் தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைப்பத்தின் இழுபறி

க.கிஷாந்தன்-
ட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 24 வீடுகள்முற்றாக தீக்கிரையாகின.

இத்தீவிபத்து காரணமாக அம் மக்கள் அனைத்து உடைமைகளையும் இழந்து 20 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் நிர்கதிநிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலிருந்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அதனைதொடர்ந்து தோட்ட நிர்வாகமும், இராணுவமும் இணைந்து இவர்களுக்கு போடைஸ் விளையாட்டு மைதானத்தில் தற்காலிககொட்டில்கள் அமைத்து கொடுக்கப்பட்டன.
குறித்த கொட்டிலகள், கட்டிக்கொடுத்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில் அவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதில் இழுபறிநிலவுவதாக அங்கு வாழும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகம் இவர்களுக்குரிய காணிகளை சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்படுவதாகவும் இதனால் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கும் நகரங்களுக்கு செல்வதென்றாலும்,வைத்தியசாலைக்குசெல்வதென்றாலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கு எவ்வளவோ பொருத்தமான இடங்கள் இருக்கின்ற போதிலும் அதனை வழங்காது.பல்வேறு சாக்கு போக்குகளை சொல்லி தோட்ட நிர்வாகம் தட்டிக்கழிப்பதாகவும்,இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் மௌனம்காத்துவருவதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது அமைத்து கொடுக்கப்பட்டுள்ள கொட்டில்களுக்கு மழை நேரங்களில் வீட்டினுள் தண்ணீர் கசிவதனால் படுக்கவும்முடியாது. பலர் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஒரு சிலரின் வீடுகளின் மூங்கில்கள் இத்துப்போய் கொட்டில்களும் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறித்தமூங்கில்களிலிருந்து தூசிகள் கொட்டுவதாகவும் அவற்றிருந்து வண்டுகள் உருவாகி தமக்கு சாப்பிட கூட முடியாத நிலைஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கொட்டில்களில் கடும் குளிர் காரணமாக பலர் கை குழந்தைகள் சிறுவர்களை வைத்து கொண்டு சொல்லொண்ணாதுயரங்களை அனுபவித்து வருவதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 20 குடும்ங்களைச் சேர்ந்த 108 பேரில் பாடசாலை மாணவர்கள் 25 பேர் அடங்குவதாகவும் இம்முறை உயர்தரபரீட்சைக்கு இருவரும்,க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு ஒரு இந்த கொட்டில்களிலிருந்தே தங்களது கற்றல் நடவடிக்கைகளைமுன்னெடுக்க முடியாது இடர்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் வெகுசன தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமாரிடம் கேட்ட பொழுது,
போடைஸ் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கட்டாயமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்காக தோட்ட அதிகாரி மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் கவனத்திற்கு எமது அமைச்சு கடிதம் மூலம் கொண்டு வந்துள்ளது.
இருந்த போதிலும் அத்தோட்டத்தில் மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்க ஒதுக்கப்பட்ட இடத்தை அம்மக்கள் நிராகரித்துள்ளனர்.
அதேசமயத்தில் குறித்த ஒரு இடம் தோட்ட நிர்வாகம் வழங்கும் பொழுது அவ்விடம் வீடுகள் அமைப்பதற்கு உகந்ததா என தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் ஊடாக உறுதி செய்யுமாக இருப்பின் உடனடியாக அங்கு வீடுகளை அமைத்து கொடுப்பதில் எமக்கு தயக்கம் இல்லை.

ஆனால் அங்கு பாதிக்கப்பட்ட 108 பேர் வசிக்ககூடிய வீடுகளை அமைத்து கொடுக்க நிர்வாகம் கொடுத்த இடத்தினை நிராகரிக்கும் படியாக சில அரசியல் தலைமைகள் அம் மக்களை தூண்டி விடுகின்றனர்.
இதன் காரணமாகவே அங்கு நிலங்கள் கிடைக்காமல் வீடுகள் கட்டி முடிக்க முடியாமல் உள்ளது. ஆனால் எமது கட்சிக்கு வாருங்கள் வீடுகளை கட்டி தருகின்றோம் என்று சொல்வது உண்மைக்கு புறம்பான விடயமாகும். இதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது மாற்று கட்சியின் சதி திட்டமாகும்.

ஆகையால் முதலில் இடத்தை தெரிவு செய்ய அதற்கான நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு எவ்வேளையிலும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -