அம்பாரை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மழைவீழ்ச்சி

பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மழைவீழ்ச்சி பதிவாகிய உள்ளமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
கடந்த பல மாதங்களாக வரட்சியான காலநிலை நிலவி வந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை (16) மாலை முதல் திடீரென பெய்து வருகின்றது.
இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வரட்சி நிலவியால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.அம்பாறை மாவட்டத்தில் வரட்சி நீடித்ததால் விவசாயச் செய்கை மேட்டு நிலப் பயிர்ச் செய்கை போன்றன வெகுவாகப் பாதிக்கப்பட்டன. நீர் நிலைகள் வற்றி வரண்டு காணப்பட்டன. குடிநீருக்காக சில பிரதேச மக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர்த் தேவையை பூர்த்திச் செய்தனர்.
கால் நடைகள் நீரின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தன. போதிய மழை வீழ்ச்சி மற்றும் நீர் நிலைகளில் போதிய நீர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயச் செய்கையை இம்மாவட்ட மக்கள் கைவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -