இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுத்துல் நஜீம் கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறை, நூலகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கல்வி வசதிகளை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களையும் வரவேற்று நன்றியைத் தெரிவித்தார். கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபாரிசின் பேரில் PSC திட்டத்தின் கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலைக்கான ஸ்மார்ட் லேர்னிங் சென்டர், நூலகம் மற்றும் அதிபர் காரியாலயம் ஆகியவை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு பாடசாலையின் அபிவிருத்தியில் சமூக நலன்விரும்பிகள், கல்வி அதிகாரிகள் மற்றும் பல தரப்பினரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக இருப்பதாகவும், இவ்வாறான உதவிகள் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமைகின்றன என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்திலும் இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ரமழான் மாதத்தின் புனிதமான தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இப்தார் நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், நோன்பு மனிதர்களின் உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் ஒரு ஆன்மிகப் பயிற்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை மற்றும் தியாகம் போன்ற உயர்ந்த பண்புகளை நோன்பு மனிதர்களுக்கு கற்றுத் தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுத்துல் நஜீம், இன்றைய தினம் பாடசாலையில் இப்தார் நிகழ்வுடன் இணைந்து கல்வி வசதிகளை மேம்படுத்தும் கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமான விடயமாக இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் பாடசாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக ஏழு பாடசாலைகளுக்கு தலா இரண்டு மில்லியன் ரூபாய் வீதம் மொத்தமாக பதினான்கு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதில் இந்தப் பாடசாலையும் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஆரம்பப் பெருவள நிலையக் கட்டிடம் சுமார் 45 மில்லியன் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், சில இறுதிப் பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தவிர 2024 ஆம் ஆண்டு கடும் காற்றால் பாடசாலை சேதமடைந்தபோது அவசர சீரமைப்பு பணிகளுக்காகவும் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.
இதன் மூலம் மொத்தமாக சுமார் ஐம்பது மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி இந்தப் பாடசாலையின் அபிவிருத்திக்காக பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா பாடசாலையின் வளங்களை மேம்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்றும், கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் ஒரு திறமையான தலைமை ஆசிரியராக அவர் விளங்குகிறார் என்றும் அவர் பாராட்டினார்.
இந்நிகழ்வில் கணக்காளர் கந்தையா லிங்கேஸ்வரன், பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபீர், வரணியா சாந்தரூபன், ஏ.எம். ஹஸீன்,யூ.எல். றியால், எம்.எல்.எம். முத்தரிஸ், அஸ்மா அப்துல் மலிக் மற்றும் ஆனந்தகுமாரசாமி சஞ்சீவன் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், சக பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மார்க்க சொற்பொழிவை கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எம். தௌபீக் (நளீமி) நிகழ்த்தினார்
நிகழ்வின் இறுதியில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர்.
நிகழ்வின் இறுதியில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர்.

0 comments :
Post a Comment