ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
இதனையொட்டி மலையக ஆலயங்களில் இன்று விசேட பூஜைகள் இடம்பெற்றன.
ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஆடி பூர்தினை முன்னிட்டு இன்று காலை கும்ப பூஜை ,திரவிய அபிசேகம்,குங்கும அர்ச்சனை,அலகார பூஜை ஆகிய இடம்பெற்று அம்பாள் உள் வீதி வலம் வந்த பக்தர்களுக்கு ஆரள் பாலித்தார்.
இதன் போது பக்தர்கள் நெய் மற்றும் தேசிக்காய் விளக்கேற்றி வழிபட்டனர்.
பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா அவர்களின் தலைiயில் நடைபெற்றன.
இதே கொட்டகலை றெயிட்டன் கே.ஓ பிரிவில் அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
ஆடிபூரத்திipன முன்னிட்டு இவ்வாலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று பாலாபிசேகமும் இடம்பெற்றன.
அலங்கார பூஜை,திரவிய அபி சேகம்,கும்ப கும்கும பூஜைகள் இடம்பெற்று அம்பாள் வெளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அம்பாள் வெளி வீதி உலா வந்து பக்த அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
இதன் போது ஏராயமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
