பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்கு வெளிச்சம் தந்த ஸாஹிரா தாயின் கல்வி வளர்ச்சி, அபிவிருத்தி என்ற முன்னோட்டத்துக்கு நிரந்தர அதிபர் என்ற தடை இன்றோடு நீங்கியுள்ளதை அறிந்து மிக்க மகிழ்வுறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான அல்ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இப்பிராந்தியத்தின் சுழிவுநெளிவுகளை அறிந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான எம்.ஐ. ஜாபீர் அவர்கள் சாஹிராவுக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையானது இந்த பாடசாலைக்குக் கிடைத்த பாக்கியமாக தான் கருதுவதாகவும் அவரது பயணம் இனிதாக அமைய வாழ்த்துவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பிரதேச வேறுபாடுகளைத் தவிர்த்து இந்தப்பிராந்தியத்தில் வீழ்ச்சி கண்டுள்ள, கல்விநிலையை உயர்நிலைக்கு கொண்டுவர முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும், பாடசாலையில் உள்ள அவரது அணி இவரது அணி என்ற அணிகளை எல்லால் கலைத்து விட்டு பிராந்தியத்தின் கல்விக்காக எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் கேட்டுள்ள ஏ.சி.யஹ்யாகான், பாடசாலையின் வளர்ச்சிக்காக எந்த அரசியல்வாதிகளிடமோ அல்லது தரப்பிடமோ இணைந்து செயற்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -