நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய பேஸ் வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் புதிய பேஸ் வேரியண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பேஸ் வேரியண்ட் எக்ஸ்.இ. என அழைக்கப்படுகிறது. இதன் துவக்க விலை ரூ. 9.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நிசான் கிக்ஸ் எக்ஸ்.இ. வேரியண்ட்டில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வேரியண்ட் உடன் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடல் எக்ஸ்.இ., எக்ஸ்.எஸ்., எக்ஸ்.வி. மற்றும் எக்ஸ்.வி. பிரி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும்.

ஒவ்வொரு வேரியண்ட்டிலும் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்ட்டுள்ளன. புதிய வேரியண்ட்டில் 50-க்ககும் அதிகமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆட்டோ ஏ.சி., ரியர் ஏ.சி. வென்ட், கூல்டு குலோவ் பாக்ஸ், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 2 டின் ஆடியோ, யு.எஸ்.பி. மற்றும் நிசான் கனெக்ட் உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.



இத்துடன் பாதுகாப்பை உறுதிப்படுத்த டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், சென்ட்ரல் டோர் லாக், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர், சைல்டு லாக், இம்பேக்ட் சென்சிங் டோர் அன்லாக் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிசான் கிக்ஸ் எக்ஸ்.இ. டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 110 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் H4K பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -