பிரதமஅதிதி கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூர்.
காரைதீவு சகா-காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரி ஆசிரியர் வேலுப்பிள்ளை விஜயபவான் எழுதிய உயர்தரவிவசாயவிஞ்ஞானபாடத்திற்கான 'பண்ணை விலங்கு வளர்ப்பு' நூல் வெளியீட்டுவிழா நாளை(3)சனிக்கிழமை கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கல்லூரி அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நூல்வெளியீட்டுவிழாவிற்கு பிரதமஅதிதியாக கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
கௌரவஅதிதியாக கல்முனைவலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் சிறப்புஅதிதிகளாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கல்முனைவலய விவசாயபாட ஆசிரியஆலோசகர் கே.செல்வராஜா பாடசாலையின் பிரதிஅதிபர் எம்.சுந்தரராஜன் உதவிஅதிபர்களான எம்.சுந்தரராஜன் எஸ்.மோகன் ஆகியோர் கலந்துசிறப்பிக்கவிருக்கின்றனர்.
நூல் விமர்சனஉரையை கல்லூரி ஆசிரியை திருமதி அருந்தவவாணி சசிகுமார் நிகழ்த்த வாழ்த்துரைகளை சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கல்முனைவலய விவசாயபாட ஆசிரியஆலோசகர் கே.செல்வராஜா ஆகியோர் நிகழ்த்துவர்.
லங்காபுத்தகசாலை வெளியிடும் இந்தநூல் நூலாசிரியர் வேலுப்பிள்ளை விஜயபவானின் மூன்றாவது நூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
