பிரதேச செயலக,கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பட வேண்டும்


நாட்டில்; தற்போதுள்ள 332 பிரதேச செயலக பிரிவுகள் 377 ஆக அதிகரிக்கபட வேண்டும் என்று உள்ளக ,உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமது அமைச்சு மேற்கொண்ட மதிப்பீட்டில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக தெரிவித்த, அமைச்சர் ஐந்து வருடங்களுககு; ஒருமுறை பிரதேச செயலகப் பிரிவுகள் தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடுகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.
நாட்டில் தற்போது 14 ஆயிரத்து 22 கிராம உத்தியோகத்தவர் பிரிவுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் 500 ஆல் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த மதிப்பீட்டின் போது பிரதேச செயலகப் பிரிவுகளின் சனத்தொகை உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -